Tuesday, June 25, 2013

தடயங்களை அழித்துவிட்டு சந்தேகநபர்கள் தலைமறைவு!!

வழக்கு ஒன்றில் சந்தேக நபர்களான புங்குடுதீவு ஜே-26 கிராமசேவகர் பிரிவில் வசிக்கும் இருவர் உரிய தவணையில் நீதிமன்றில் ஆஜர் ஆகாத காரணத்தால் இவ்விருவருக்கும் நீதிமன்றத்தால் கிராமசேவகர் ஊடாக அழைப்பாணை விடுவிக்கப் பட்டுள்ளது. எனவே குறித்த பிரிவின் கிராம சேவகர் இவ்விருவரையும் வழக்கிற்குசெல்ல கூறுவதற்காக தம்மை வந்து உடனடியாக சந்திக்குமாறு கூறியிருந்தவேளையில், நேற்று மதியமளவில் மதுபோதையில் கிராமசேவகர் அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்துள்ள இவ்விருவரும் தமது ஆவணங்களை கிழித்துவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக குறித்த கிராம சேவகர் ஊர்காவற்துறை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார், இந்த முறைப்பாடு தொடர்பாக கருத்து தெரிவித்த ஊர்காவற்துறை பொலிசார், குறித்த பிரதேசத்தில் இவ்விருவரும் தற்போது இல்லை என்றும் தாம் தொடர்ந்தும் இவ்விருவரையும் வெளிபிரதேசங்களிலும் தேடிவருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment