Thursday, February 28, 2013

கேகாலை நகரிலுள்ள பள்ளிவாசல் மீது இன்று அதிகாலை தாக்குதல், பள்ளிக்கு பொலிஸ் பாதுகாப்பு- பெரும் பதற்றம்

கேகாலை நகரிலுள்ள ஜும்ஆ பள்ளிவாசல் மீது இன்று வியாழக்கிழமை அதிகாலை இனந்தெரியாதநபர்கள் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் இதன் காரணமாக பள்ளிவாசலின் கண்ணாடிகள் கடும் சேதத்துக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸிpல் முறைப்பாடென்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை இரண்டு மணியளவில் இடம்பெற்ற இத்தாக்குதல் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து பள்ளிவாசலுக்கு பாதுகாப்பு கடமையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன் சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் இன்று காலை பள்ளிவாசலுக்கு விஜயம் செய்து சம்பவம் தொடர்பில் கேட்டறிந்துள்ளார்.

இதனை தொடர்ந்தே சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹியபால ஹேரத் தலைமையில் கேகாலை மாநகர சபையில் விசேட கூட்டமொன்று இடம்பெறுகின்றது.

இதேபோன்று காலி, ஹிரும்புரை முஹைதீன் ஜும்ஆப் பள்ளிவாசல் மீது கடந்த வெள்ளிக்கிழமை கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment