Monday, November 19, 2012

கம்பளை மாணவர்கள் 18 ஒவ்வாமையினால் பாதிப்பு தொடரும் விபரீதம்

கம்பளையில் உள்ள பாடசாலை மாணவர்கள் 18 பேர் ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கம்பளை முஸ்லிம் வித்தியாலயத்தை சேர்ந்த மாணவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டனர்.

இதேவேளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என கொழும்பு நோய் பரம்பலியல் பிரிவு தெரிவித்தது.

கம்பளையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரண்டு பாடசாலைகளை சேர்ந்த மாணவர்கள் ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்டதை அடுத்து அப்பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டது.

அவ்விரண்டு பாடசாலைகளும் கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று திறக்கப்பட்ட நிலையிலேயே இச்சம்பவமும் இடம்பெற்றுள்ளது. ஆயினும் இவ் ஒவ்வாமைக்கு என்ன? காரணம் என இதுவரையில் கண்யறிப்படவில்லை.

No comments:

Post a Comment