யாழ்.போதனா வைத்தியசாலையின் ஈ.என்.ரி வைத்திய நிபுணர் வைத்தியக்கலாநிதி திருமாறன் இனந்தெரியாதவர்களால் வாளால் வெட்டப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழ்.தனியார் வைத்தியசாலையென்றலிருந்து திரும்பிக்கொண்டிருந்த சமயமே இவர் மீது இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இச்சம்பவம் இரவு 9.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதன்போது படுகாயமடைந்த இவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:
Post a Comment