இலங்கையர் உட்பட மொத்தம் 45 பணிப்பெண்கள் ஸவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்படவுள்ளதாக ‘பிரிட்டன் கார்டன்’ பத்திரிகை செய்திவெளியிட்டுள்ளது. ஸவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட உள்ளவர்களின் அட்டவணையில் பிலிப்பீனிய, இந்திய, எத்தியோப்பிய பணிப்பெண்களும் அடங்குவதாக அப்பத்திரிகை அறிவித்துள்ளது.
அவர்களில் ஒருவருக்கு எதிராகக்கூட வழக்குத் தொடரப்படவோ, வழக்கறிஞர்களின் உதவி பெறப்படவோ இல்லையென்று ஸவுதி அரேபிய மனித உரிமைகள் தொடர்பான ஆய்வுகள் கூறியிருப்பதாக கார்டியன் செய்திப் பத்திரிகை சுட்டிக் காட்டுகிறது.
பணிவிடை செய்யும் காலப்பகுதியில் அடிக்கடி துன்புறுத்தப்பட்டதாகவும், தன்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயன்ற எஜமானன் ஒருவரை கத்தியினால் குத்திக் கொலை செய்ததாகவும் குறிப்பிடும் இந்தோனேசியாவைச் சேர்ந்த ஒரு பணிப் பெண்ணும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 2012 இல் ஸவுதி அரேபியாவில் 69 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டிருந்தது. அதில் இலங்கையைச் சேர்ந்த ரிஸானா நபீக்கும் உள்ளடங்குகிறார்.
ஸவுதியில் பணிபுரியும் இலங்கைப் பணிப்பெண்களின் தொகை மூன்று இலட்சத்து எழுபத்தையாயிரத்திற்கும் அதிகமாகும்.
(கலைமகன் பைரூஸ்)

No comments:
Post a Comment