மன்னார் மாவட்டத்தின் பிராந்திய ஊடகவியலாளர்கள் மூவருக்கு எதிராக 'சியாத் இயக்கம்'' என்ற பெயரில் கொலை மிரட்டல் கடிதங்கள் அனுப்பி தனித்தனியே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. குறித்த கொலை மிரட்டல் தொடர்பான கடிதம் நேற்றைய தினமே குறித்த மூன்று ஊடகவியலாளர்களுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இக்கடிதனமானது, மன்னார் மாவட்டத்தின் தொலைக்காட்சி செய்தியாளர்களான ஏ.ரீ.மார்க், என்.ஜே.பெலிஸ்டஸ் பச்சக் மற்றும் பத்திரிக்கை செய்தியாளரான எஸ்.ஆர்.லெம்பேட் ஆகியோருக்கே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இக்கடிதத்தில் மன்னார் நீதிமன்ற தாக்குதல் சம்பவத்தின் போது நீதிமன்னறத்திற்கு ஆதரவாகவும், அரசிற்கும், அமைச்சர் றிஸாட் பதீயூதினுக்கு எதிராகவும் செயற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இஸ்ஸாம் மதத்தை கேவலப்படுத்தும் விதத்தில் செய்தி எழுதப்பட்டுள்ளதாகவும் இறுதி எச்சரிக்கை எனவும் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர்காளாகிய தங்களை இறுதியாக எச்சரிப்பதோடு 'அல்லாவிடம் கொடுக்கப்படுவீர்கள்' என 'சியாத் இயக்கம்'' என்ற பெயரில் எழுதப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை ஏனை நாடுகளைப் போன்று இலங்கையிலும் தீவிரவாதச் செயற்பாடுகளை பகிரங்கமாக முஸ்லீம்கள் ஆரம்பித்துள்ளதாகவும் இது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு இதனைக் கொண்டு செல்லவுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment