என்னுடைய சின்ன மகளை இரக்கமில்லாமல் கொலை செய்த சவூதி அரசாங்கத்தினதோ, அல்லது சவூதி மக்களுடையதோ உதவி எனக்கோ சரி என்னுடைய குடும்பத்திற்கோ தேவையில்லையென்று சவூதி அரேபியாவில் கழுத்து வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட கைப் பணிப்பெண் ரிசானாவின் தாய் அஹமது செய்யது பரீனா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில்; அவர் தெரிவிக்கையில்,
எனக்கும் என்னுடைய குடும்பத்திற்கும் உதவி செய்ய பலர் சவூதியில் தயராக உள்ளனர் என்று அறிந்து கொண்டேன்.
சவூதியைச் சேர்ந்த எவரின் உதவியும் எனக்கு வேண்டாம் இவ்வாறு யாரும் அன்பளிப்புகளை எடுத்துக்கொண்டு தன்னுடைய வீட்டுப் பக்கம் வரவேண்டாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அமைச்சர் ஹில்புல்லா சவூதி தனவந்தர் ஒருவர் ரிசானாவின் குடும்பத்திற்கு உதவி செய்யத் தயாராக உள்ளதாகத் தெரிவித்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment