Sunday, January 20, 2013

சவூதியின் உதவியை ஏற்காவிடின் திருப்பி அனுப்பப்படும் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு

சவூதியில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட மூதூர் பணிப் பெண் ரிசானாவின் மரணத்திற்காக சவூதி அரேபிய இளவரசரின் சட்ட ஆலோசகர், வழங்கிய உதவிப் பணத்தை ரிசானாவின் குடும்பம் ஏற்காவிடின் அப்பணத்தை திரும்பவும் சவூதிக்கே திருப்பியனுப்ப உள்ளதாக பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார். சவூதியின் எந்த உதவியும் தனக்கோ தனது குடும்பத்திற்கோ வேண்டாம் என ரிசானாவின் தாயார் தெரிவித்துள்ள நிலையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ரிசானாவின் குடும்பத்திற்காக சவூதி அரேபிய இளவரசரின் சட்ட ஆலோசகர் 10 இலட்சம் ரூபாவை பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்விடம் கையளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

.

No comments:

Post a Comment