Sunday, February 17, 2013

ஊடகவியலாளர், களுபோவில வைத்தியசாலையிலிருந்து தேசிய வைத்தியசாலைக்கு...

கழுத்தின் இடது பக்கத்தை துப்பாக்கி ரவை தாக்கி களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட, சண்டே லீடர் ஊடகவியலாளர் பராஸ் சௌக்கத் அலி களுபோவில வைத்தியசாலையிலிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அவருக்கு சத்திரசிகிச்சை ஒன்று செய்யப்பட வேண்டியுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவிக்கிறார்.

‘கல்கிசை ஓசன் ப்ளூ’ ஓட்டலில் வைத்தே பராஸ் துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளாகியிருக்கிறார். அந்த ஓட்டலின் உரிமையாளரும் அவரே என்பது குறிப்பிடத்தக்கது.

(கேஎப்)

No comments:

Post a Comment