Monday, March 18, 2013

இன்றும் பௌத்த பிக்குகள் மீது இந்தியாவில் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. வீடியோ இணைப்பு.

இந்தியாவின் சென்னை மத்திய புகையிரத நிலையத்தில் வைத்து இன்றும் இலங்கை இளம் பௌத்தத் துறவியொருவரை எல்ரீரீஈ ஆதரவாளர்கள் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

தில்லியிலிருந்து தமிழ்நாடு கடுகதி புகையிரதத்தில் சென்னை மத்திய புகையிரதத்திற்கு வருகை தந்துள்ளஇளம் பௌத்த துறவியொருவரே இத்தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

'தமிழனை கொன்றுவிட்டு இங்கு வருகிறீர்களா? சிங்கள நாயே வெளியேறு! தமிழ் நாட்டுக்கு வராதே - உங்க நாட்டுக்குத் திரும்பிப் போய்விடு!' என்று பெருஞ் சத்தத்துடன் ஈழ ஆதரவாளர்கள் பௌத்த துறவியை அதட்டியுள்ளனர்.

கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த இளம் பௌத்த துறவி உள்ளிட்ட 20 பேர் தம்பதிவ யாத்திரைக்காக செல்லும் வழியிலேயே இத்தாக்குதலுக்குள்ளாகியிருக்கின்றார். இச்சம்பவத்தையடுத்து அவர்களில் பத்தொன்பது பேரை உடனடியாக இலங்கைக்கு அனுப்பிவைப்பதற்கு இந்திய அதிகாரிகள் செயற்பட்டுள்ளனர்.

தாக்குதலுக்குள்ளான பௌத்த துறவியை பொலிஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்தத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையோர் தலைமறைவாகியுள்ளதாக இந்திய செய்தி ஊடகங்கள் ஊர்ஜிதம் செய்துள்ளன.

இதற்கு சில நாட்களுக்கு முன்னரும் புதுதில்லியில் வைத்து தொல்பொருளியல் கல்வியை மேற்கொள்ளும் பெளத்த துறவியொருவர் இவ்வாறாகத் தாக்கப்பட்டார் என ‘த ஹிந்து’ பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.



(கேஎப்)

No comments:

Post a Comment