Thursday, November 29, 2012

நாளை மீண்டும் நாலாம் மாடி செல்லும் சிறிதரன்.

வன்னியிலிருந்து அண்மையில் இராணுவத்தில் இணைந்து கொண்ட பெண்கள் இராணுவத்தினரின் பாலியல் தேவைகளை பூர்த்தி செய்ய இணைந்து கொண்டுள்ளார்கள் என சிறிதரன் தெரிவித்திருந்த கருத்து தொடர்பில் சிறிதரன் குற்றப் புலனாய்வுத் துறையினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

கடந்த 27ம் திகதி 4ம் மாடியில் விசாரணைகள் இடம்பெற்றபோது சிறிதரன் பிபிசிக்கு அவ்வாறான கருத்தொன்றினை தெரிவிக்கவில்லை என மறுதலித்துள்ளார்.

இந்நிலையில் நாளை அவர் மீது விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இவர் பிபிசிக்கு தெரிவித்த ஒலிப்பதிவு நவீன தொழில்நுட்பம் ஊடாக பரிசீலிக்கப்பட்டு சிறிதரனது குரல் ஒப்புவிக்கப்பட்டால் தேசத்துரோக குற்றத்திற்கு அப்பால் அப்பட்டமாக உண்மையை மறைக்க முற்பாட்டார் என்ற குற்றச்சாட்டும் சுமத்தப்படலாம் என நம்பப்படுகின்றது.



No comments:

Post a Comment