கைது செய்யப்பட்டு வெலிக்கந்த புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்டு வரும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரையும், அவர்களது பெற்றோர்கள் மற்றும் பல்கலைக்கழக பீடாதிபதிகள் இன்று மார் ஒரு மணி நேரம் வரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இந்த சந்திப்பின் போது, மாணவர்கள் தாம் எப்போது இந்த இடத்தில் இருந்து வெளியில் வருவோம் என எதிர்பார்த்து காத்திருப்பதாக' மேற்படி மாணவர்கள் தெரிவித்ததாக சந்திப்பில் கலந்துகொண்ட பீடாதிபதியொருவர் தெரிவித்ததுடன் மாணவர்களுக்கு அரசின் நிலமை தொடர்பில் எடுத்து கூறியதுடன் கடந்தகாலங்களில் மாணவர்களது விடுதலை தொடபில் பல்கலை மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் அவர்களுக்கு தெரியப்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.
இவர்களுக்கான உளவளத்துணை எப்போது முடியுமென்றும் மாணவர்கள் எப்போது விடுதலை செய்யப்படுவார்கள் என்ற விபரங்களையும் அறிந்து கொள்வதற்கு தான் முயற்சித்ததாகவும் ஆனால் அதற்குரிய அதிகாரிகள் அங்கு இருக்கவில்லை என்று மேற்படி பீடாதிபதி மேலும் தெரிவித்தார்.
தமது பிள்ளைகளை பார்வையிட்ட பெற்றோர் தமது பிள்ளைகளிடம் புலிகள், தமிழ் தேசியம் என குரல் கொடுப்பதை விட்டு உங்களுடைய கல்வியைப்பற்றி சிந்தியுங்கள் அப்போதுதான உங்களது விடுதலை வேகமடையும் அதைவிட்டு புலிகள், தமிழ் தேசியம் என்றால் இப்போதைக்கு விடுதலை கிடைக்காது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார்கள் பெற்றோர்.

No comments:
Post a Comment