Tuesday, December 25, 2012

நவீன தொழில் நுட்பகாலத்தில் கடவுளைப் பற்றி நினைக்க நேரமில்லை- போப்பாண்டவர் பெனடிக்

நவீன தொழில்நுட்பங்கள் நிறைந்த வேகமான வாழ்க்கையில் மக்களுக்கு கடவுளைப் பற்றி நினைப்பதற்கு நேரம் இருப்பது இல்லை. வாழ்க்கையின் வேகம் அதிகரிக்கும் போது மிகக் குறைவான நேரமே நமக்குக் கிடைக்கிறது. இந்த நிலையில் கடவுளுக்கு அவசர முக்கியத்துவம் அளிப்பது இல்லை என போப்பாண்டவர் பெனடிக் கிறிஸ்துமஸ் தின உரையில் தெரிவித்துள்ளார்..


கிறஜஸ்மஸ் தினத்தை முன்னிட்டு வாடிகன் நகரில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில், போப் ஆண்டவர் பெனடிக்ட் கலந்து கொண்டு மக்களுக்கு கிறிஸ்துமஸ் தின செய்தியை வழங்கினார்.

கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் என்பதிலேயே பலருக்கு உடன்பாடு இல்லாத நிலை உள்ளது.

பலருடைய உணர்வுகள் மற்றும் விருப்பங்களில் கூட கடவுள் என்ற சிந்தனைக்கு இடம் இல்லாமல் உள்ளது. இந்த நிலை மாற வேண்டும்.

நமது எண்ணங்கள் நிறைவேறி, திட்டங்கள் வெற்றி பெற்று உள்ளத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்க கடவுளுக்கு இடம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்



.

No comments:

Post a Comment