யாழ். வட்டுக்கோட்டைப் பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் ஒன்று வட்டுக்கோட்டைப் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை மீட்கப்பட்ட இச்சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்தே, வட்டுக்கொட்டை சங்கரத்தை பத்திரகாளியம்மன் கோவில் அருகில் இந்தச் சடலம்; மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லையெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்குச் சென்ற மல்லாகம் நீதவான் சடலத்தை பார்வையிட்டுள்ளதுடன், சடலத்தை யாழ். போதனா வைத்திசாலையில் ஒப்படைக்குமாறு பணித்துள்ளார்.

No comments:
Post a Comment