(கலைமகன் பைரூஸ்)
எமது நாட்டுக்கு மிகப் பெரிய அளவில் மீண்டும் இனவாதம், மதவாதம் தலைதூக்கியிருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் திரு.சோமவங்ச அமரசிங்க குறிப்பிடுகிறார். அவர் இவ்வாறு நேற்று (24)கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் துண்டுப் பிரசுரங்கள் .பகிர்ந்தளிக்கும் போது குறிப்பிட்டார்.
இனவாதத்திற்கும் மதவாதத்திற்கும் இனி இடமளியோம்! சகல இனங்களுக்குமிடையில் ஒற்றுமையைக் கட்டியெழுப்புவோம்! எனும் கருத்தை கருதுகோளாகக் கொண்டு நாடு முழுதும் இந்தத் துண்டுப் பிரசுரம் பகிர்ந்தளிக்கப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
கட்சியின் தலைவர் சோமவங்ச அமரசிங்க மீண்டும் கருத்துத்தெரிவிக்கையில்.....
இன்று நாம் மக்களுக்கு உண்மையைத் தெளிவுறுத்தும் துண்டுப் பிரசுரம் பகிர்ந்தளிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளோம். இந்நாட்டில் இந்த நேரம் வரையில் மிகப் பாரதூரமான முறையில் , பயங்கரமான முறையில் மீண்டும் இனவாதமும் மதவாதமும் தோற்றம் பெறுவதற்காக கருமங்கள் நிகழ்ந்தவண்ணமுள்ளன. இந்நிலைமையால் பெரும் பிரச்சினைக்கு நமது நாடு முகம்கொடுத்திருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியினராக நாம் நம்புகிறோம். தேசிய ஒற்றுமை, தேசிய ஒருமைப்பாடு ஆகியவற்றை இல்லாமல் செய்யும் பயமுறுத்தல் உள்ளது. இதற்கு அரசாங்கத்திடமிருந்து எந்த விடைகளும் வருவதில்லை. அரசாங்கம் இதனைத் தீர்ப்பதும் இல்லை. இந்த அரசாங்கம் இந்தப் பிரச்சினையை கண்டுகொள்வதுமில்லை. இதனைச் சாதகமாகவே கருதுகிறது.
இந்நிலைமையில் மக்களுக்கு விழிப்புணர்வூட்ட வேண்டும் என நாம் கருதுகிறோம். மீண்டும் ஒருமுறை நாட்டில் இனவாத, மதவாத கைகலப்புக்கள் நிகழ்வதற்கும், நாட்டில் வேற்றுமையை ஏற்படுத்துவதற்கும் யாருக்கும் இடமளிக்கக் கூடாது. அதனால்தான் மக்கள் விடுதலை முன்னணி சொல்வது என்னவென்றால், இன்று நாட்டில் நிலவும் பொருளாதார, அரசியல், சமூகவியல், சமுதாயம் மற்றும் கலாச்சார பிரச்சினைகள் பற்றி பொதுமக்கள் சிந்திக்க வேண்டும் , அதற்கான தீர்வு யாது என்பது பற்றிக் கவனத்திற் கொள்ள வேண்டும். அதற்கான ஒரே ஒரு வழி எதுவென்றால் இந்த அரசைக் கவிழ்க்க வேண்டும். இந்த ஆட்சி முறையில் மேலெழும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவியலாது. அதற்காகத்தான் மக்கள் விடுதலை முன்னணியினராக நாம் இந்த அரசாங்கத்தின் மோகத்தில் சிக்குண்டு அல்லற்படாமல் நாட்டில் ஒற்றமையும் சகசீவனமும் உதிக்கும் வண்ணம் போர்க்கொடி தூக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
என்றும் அவர் குறிப்பிட்டார்.



No comments:
Post a Comment