Wednesday, December 26, 2012

உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்ற த. தே. கூட்டமைப்பு பாராளுமன்ற உ.குழு விரைவு

உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கையிலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜவர் அடங்கிய குழுவினர் மலேசியாவிற்கு நேற்றிரவு புறப்பட்டுச் சென்றுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா ,எம்.சுமந்திரன், சி.;சிறிதரன் , சீ.யோகேஸ்வரன் , பா.அரியநேத்திரன் ஆகிய ஜவருமே இவ்வாறு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

இம்மாநாட்டில் பல்வேறு நாடுகளிலிருந்தும் பலர் கலந்து கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment