பயங்கரவாதத் தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரையும் விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பால் உயர் நீதிமன்றில் வழக்கொன்று தாக்கல் செய்யப்படவுள்ளதாகத் தெரியவருகின்றது.தற்போது கைது செய்யப்பட்டு வெலிக்கந்த புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்களான
ப.தர்ஷானந்த், எஸ்.சொலமன், வி.பவானந்தன், க.ஜெனமேஜெயந் ஆகிய நால்வரையும் விடுதலை செய்யுமாறு கோரி எதிர்வரும் ஜனவரி மாத முற்பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழக்குத் தாக்கல் செய்யும் என தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment