யாழ். குப்பிளான் பகுதியில் இந்து – கிறிஸ்தவ சமயங்கள் சார்ந்த மக்களுக்கிடையில் தேவாலயம் ஒன்று அமைப்பது தொடர்பாக கடுமையான முரண்பாடு நிலவிவரும் நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குறித்த பகுதியில் திடீரென கிறிஸ்த்தவ தேவாலயம் ஒன்று அமைக்கப்பட்டு திறக்கப்பட இருந்த நிலையில் இந்து மதம் சார்ந்த மக்கள் அப்பகுதியில் போராட்டம் ஒன்றினை நடத்தியிருக்கின்றனர்.
இதனையடுத்து, தேவாலயத்திற்கு முன்னால் வந்த இந்து மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவ மக்களே இல்லாத இடத்தில் தேவாலயம் தேவையில்லை எனவும், அதற்கான சட்டரீதியான அனுமதிகள் பெறப்படவில்லை எனவும் கூச்சலிட்டதுடன் தொடர்ந்து அந்தப்பகுதியில் ஆர்ப்பாட்டமொன்றையும் நடத்தினர். இதனையடுத்து, குறித்த பகுதிக்கு வந்த பொலிஸார் மக்களை துரத்தி நிலைமையினை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதேவேளை கடந்த 2009ம் ஆண்டின் பின்னர் யாழ்.மாவட்டத்தில், கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் இருந்த நிலையினைப் போன்று மீண்டும் மதச்சண்டைகளும், சாதிச் சண்டைகளும் அடிக்கடி நடந்துகொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment