Sunday, January 27, 2013

ஆசிரியர்களின் பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு, எவ்வித விசாரணையும் இல்லை பணியிலிருந்து இடைநிறுத்தப்படுவர்- பிரதி கல்வியமைச்சர்

பாலியல் குற்றச்சாட்டுக்களில் ஈடுபடும் ஆசிரியர்கள் எந்தவித விசாரணையுமின்றி சேவையிலிருந்து இடைநிறுத்தப்படுவார்கள் என பிரதி கல்வியமைச்சர் விஜத விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், அண்மைக்காலமாக பாடசாலை ஆசிரியர்கள் பாலியல் குற்றச்சாட்டுக்களுக்குள்ளாகும் செயற்பாடுகள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

இது தொடர்பில் சிறுவர் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் மகளிர் விவகார அமைச்சு மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை ஆகியவையுடன் இணைந்து கல்வியமைச்சு நடவடிக்கை எடுக்கவுள்ளது.

ஆசியர் ஒருவர் மீது பாலியல் குற்றம் தொடர்பான முறைப்பாடு மேற்கொள்ளப்படுமானால் அக் குற்றச்சாட்டு உண்மையானதா அல்லது பொய்யானதா என ஆராயும் முன்னர் அவர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்படுவார் .

பணி நிறுத்தம் செய்யப்பட்ட பின்னரே அவர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment