இலங்கையின் அமைச்சரவையானது நாளை அல்லது மறுதினம் திங்கட்கிழமை மாற்றப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆயினும் அமைச்சரவை மாற்றம் தொடர்பான இறுதித் தீர்மானம் இன்னமும் மேற்கொள்ளப்படவில்லையென்றும் இறுதித்தீர்மானம் நாளை மேற்கொள்ளப்படும் என்றும் தெரியவருகின்றது.
அமைச்சரவை மாற்றத்தின் போது 8 துறைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றதோடு இரு புதிய துறைகளை உள்ளடக்க வாய்ப்பு உள்ளது
புதிய சிலருக்கும் அமைச்சுப் பதிவிகள் வழங்கப்படலாம் என்றும் தெரியவருகின்றது.
இதேவேளை, இந்த அமைச்சரவை மாற்றத்தின் போது பல புதிய பிரதி அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் தகவல்கள்; தெரிவிக்கின்றன.

No comments:
Post a Comment