யாழ். பல்கலைக்கழகத்தில் கலைப்பீடத்தில் இரண்டாம் தரத்தில் கல்வி பயிலும் எஸ். துளசிக்கா (வயது 22) என்ற மாணவி இன்று (26.01.2013)) காலை தகனக்கு தானே தீ மூட்டிய நிலையில் உடல் முழுவதும் எரிகாயங்களுடன் யாழ். போதனா வைததியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்..
இந்த சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த யாழ் வைத்தியசாலை பொலிசார் யாழ். புகையிரத நிலைய வீதியில் உள்ள அவரது வீட்டில் காலை 8.30 மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதுடன் ஆரம்பக்கட்ட விசாரணையில் மாணவியே தனக்குத்தானே தீமுட்டி கொண்டுள்ளதாகவும் தற்போது மாணவியின் நிலை கவலைக்கிடமான நிலையில் காணப்படுவதாகவும் இது தொடர்பாக தாம் மேலதிக விவாரணைகள் மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டார்.

No comments:
Post a Comment