Sunday, February 24, 2013

நீர்கொழும்பில் 17 வயது மாணவி கொலை! சந்தேக நபரை மடக்கிப் பிடித்தனர் ஊரார்

நீர்கொழும்பில் 17 வயது மாணவியொருவர் வீட்டில் வைத்து கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று முன் தினம் (23) காலை 8.45 மணியளவில் இக்கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிம்புலாபிட்டிய மகா வித்தியாயத்தில் தரம் 11 இல் கல்வி கற்று கபொ.த. சா.த. பரீட்சை பெறுபேற்றை எதிர்பார்த்திருந்த தினேஷிகா மதுரங்கி பெர்னாந்து என்ற மாணவியே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் பிரதேசவாசிகள் பிடித்து நீர்கொழும்பு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். பலாங்கொட பிரதேசத்தை சேர்ந்த, கொலை செய்யப்பட்ட மாணவியின் வீட்டுக்கருகில் உள்ள பட்டாசு தொழிற்சாலையொன்றில் தொழில் புரிபவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவராவார்.

தினேஷிகாவின் பெற்றோரும், சகோதரரும் தொழில் நிமித்தம் வெளியே சென்றிருந்தவேளை, தினேஷிகா மாத்திரம் வீட்டில் இருந்தபோது இக்கொலை இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த நீர்கொழும்பு பிரதான நீதவான் ஏ.எம்.என்.பி. அமரசிங்க விசாரணை நடத்தினார். மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

(கேஎப்)

No comments:

Post a Comment