Thursday, February 21, 2013

ஹலால் சான்றிதழை ரத்துச் செய்ய வேண்டும், ஜ.தே.க வின் நிலைப்பாடு நாட்டில் முஸ்லீம்கள் 8 சதவீதமானவர்கள்.!

இலங்கையில் முஸ்லிம் மக்களின் உலமா சபை வழங்குகின்ற ஹலால் சான்றிதழை ரத்துச்செய்ய வேண்டுமென்பதே ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடாகும். இதனை 8 வீதமான முஸ்லிம் மக்களுக்கு உணர்த்த வேண்டியது அரசாங்கத்தின் கடமை என கட்சியின் மேல்மாகாண சபை உறுப்பினர் நிரோஷன் பாதுக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்

எமது நிலைப்பாட்டை நாம் தெளிவாகக் கூறிவிட்டோம். ஹலால் சான்றிதழ் விடயத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நிலைப்பாடு என்னவென்பதனை வினவுகின்றோம்.

ஹலால் சான்றிதழ் தொடர்பில் ஜனாதிபதி தனது நிலைப்பாட்டை அறிவிக்காவிடின் பிலியந்தலையிலிருந்து மக்கள் போராட்டம் ஆரம்பிக்கப்படும்.
என்றார்.

No comments:

Post a Comment