இலங்கை கட்டளைகள் நிறுவனம் ஹலால் சான்றிதழ் வழங்குவது தொடர்பில் அரசாங்கம் இதுவரை எந்தவொரு பிரேரணையையும் முன்வைக்கவில்லை, ஹலால் போன்றதொரு மத சான்றிதழை வழங்குவதற்கு இலங்கை கட்டளைகள் நிறுவனத்திற்கு எந்த உரிமையும் கிடையாது என தொழிநுட்பவியல் ஆராய்ச்சி அமைச்சர் பாட்டலிசம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.ஜம்இய்யத்துல் உலமா சபையால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கை தொடர்பில் கருத்து வெளியிடும்போது, ‘ஹலால் சான்றிதழை அரசாங்கம் வழங்குவதாயின் அதற்குத் தானும் விருப்புத் தெரிவிப்பதாக’ கருத்துரைக்கும் போதே சம்பிக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
உணவுப் பொருட்கள் மற்றும் பண்டங்களை விஞ்ஞான ரீதியாக ஆய்வுக்குட்படுத்தி அதற்குச் சான்றிதழைப் பெற்றுத்தருவதே இலங்கை கட்டளைகள் நிறுவனத்திற்குரிய பணி. அதைவிடுத்து, மதம்சார்பான விடயத்தில் தலையிட அந்நிறுவனத்திற்கு முடியாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். கட்டளைகள் நிறுவனத்தின் மூலமாகவோ அல்லது பிற நிறுவனங்களின் மூலமோ சான்றிதழ் வழங்குவது பற்றி அரசாங்கம் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
(கேஎப்)
No comments:
Post a Comment