Monday, February 25, 2013

பெற்றோர்களை குற்றவாளிகளாக்கி ஜெனீவாவில் தப்பிக்கும் சூழ்ச்சியில் -நோர்வே அரசாங்கம்

நோர்வேயின் சிறுவர் காப்பகங்களால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வெளிநாட்டுச் சிறுவர்கள் விவகாரத்தில் அவர்களது பெற்றோர்களை பலவந்தமாக குற்றவாளிகளாக்கி அதன் மூலமான அறிக்கை ஒன்றை ஜெனீவா பேரவையில் சமர்ப்பிக்க நோர்வே அரசாங்கம் இறங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம் தமது செயற்பாட்டை சர்வதேசத்தின் முன்னிலையில் நியாயப்படுத்துவதற்கான சூழ்ச்சிகர நடவடிக்கைகளில் நோர்வே அரசாங்கம் மூடிக்கி விட்டுள்ளது.

நோர்வே அரசாங்கத்தின் நேரடி கண் காணிப்பின் கீழ் இயங்குகின்ற சிறுவர் நலன் காப்பகங்களால் வெளிநாட்டுப் பெற்றோரிடமிருந்து பலவந்தமாகவும் அதேநேரம் கடத்தல் பாணியிலும் கொண்டுசெல்லப்பட்ட குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் விடயத்தில் உண்மை நிலைமைகளை ஆய்ந்தறியாத வகையில் தயாரிக்கப்பட்டதான குற்றச்சாட்டுக்களை ஒப்புக்கொள்ளுமாறு பாதிக்கப்பட்ட பெற்றோர் நோர்வே சிறுவர் காப்பங்களால் நிர்ப்பந்திக்கப்பட்டு வருவதாக தெரிய வருகின்றது.

இவ்வாறு தயாரிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை பாதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பெற்றோர் ஒப்புக் கொள்ளும் பட்சத்தில் அந்த ஒப்புதல்களை ஜெனீவா பேரவையில் சமர்ப்பித்து அதனுடாக தமது அரசாங்கத்தின் கீழ் இயங்குகின்ற சிறுவர் காப்பகங்களின் செயற்பாடுகளை நியாயப்படுத்தும் சதித்திட்டமாக இருப்பதாகச் கூறப்படுகின்றது.

No comments:

Post a Comment