Tuesday, February 19, 2013

வெளியாகியுள்ள பாலச்சந்திரனின் புகைப்படங்கள் உண்மையில்லை திரிவுபடுத்தப்பட்டவை- இராணுவப் பேச்சாளர்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன், பாலச்சந்திரன் இராணுவத்தினரிடம் காவலில் இருந்தபோது படுகொலை செய்யப்பட்டுள்ளதாக வெளியிட்டுள்ள புகைப்படங்களில் உண்மையில்லை என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.வெளியாகியுள்ள பாலச்சந்திரனின் புகைப்படங்கள் தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பாலச்சந்திரனின் புகைப்படங்கள் இலங்கைக்கு எதிரானவர்களின் திட்ட மிட்ட செயற்பாடுகளே இவை.

சிலர் நாட்டைப் பிளவுபடுத்தும் நோக்கில் பொய்யான தகவல்களையும், வதந்திகளையும் திட்டமிட்ட வகையில் பரப்பி வருகிறார்கள்.

நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலே இராணுவத்துக்கு எதிராக போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கப்படுகின்றன. இக்குற்றச்சாட்டுக்கள் இலங்கைக்கு புதியதல்ல.

இப் புகைப்படங்கள் திரிவுபடுத்தப்பட்ட நிலையில் இணையத்தின் வாயிலாக இலங்கைக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் வெளியிடப்படுகின்றன என்றார்.

No comments:

Post a Comment