இலங்கையில் பயங்கரவாதிகளினுடனான யுத்தத்தின் இறுதி நாட்களில் சரணடைந்த பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் சுட்டுக்கொல்லப்பட்டார் என வெளியாகியிருக்கும் படங்களில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை என இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித் தெரிவித்துள்ளார். இவர் ஊடகங்களுக்கு இது தொடர்பில் தெரிவிக்கையில் : 'மீடியாக்களில் வெளியாகியுள்ள போட்டோக்களை நானும் பார்த்தேன். ஆனால் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் தமது மெய்ப்பாதுகாவலர்களுடன் இலங்கை ராணுவத்திடம் சரணடைந்தபின் கொல்லப்பட்டதாக காண்பிக்கப்படும் போட்டோக்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த முடியவில்லை' என்று கூறியிருக்கின்றார்.
No comments:
Post a Comment