Monday, February 18, 2013

பிரபாகரனின் மகன் இராணுவத்தால் கைது செய்யப்பட்ட பின்னர் கொலை செய்யப்பட்டார்- The Independent செய்தி- படங்கள் இணைப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புதல்வன் பாலச்சந்திரன் (வயது-12)இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட பின்னர் பதுங்கு குழிகளில் வைக்கப்பட்ட பின்னரே இராணுவத்தினரால் கொலை செய்யப்பட்டதாக The Independent பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.இக்கதையை சொல்லும் சில படங்களையும் அப்பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த வருடம் கிடைக்கப்பெற்ற போரின் பின்னரான கொடூரப் படுகொலைகள் பற்றிய காணொளியில் பாலச்சந்திரனின் உடலம் காட்டப்படது.

இப்பொழுது கிடைத்திருக்கும் ஆதாரங்கள் பாலச்சந்திரன் உயிருடன் பிடிக்கப்பட்டுப் பின்னர் படுகொலை செய்யப்பட்டிருப்பது சந்தேகங்கள் எதுவுமின்றி நிரூபிக்கின்றதாக The Independent பத்திரிகை செய்தி தெரிவிக்கின்றது.

கிடைக்கப்பட்ட நான்கு டிஜிட்டல் படங்களும் ஒரேநாள் ஒரே புகைப்படக் கருவி மூலம் எடுக்பட்டிருப்பதை புகைப்பட ஆதாரங்களை அராய்ந்தறியும் நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர்.

இதில் இரண்டு படங்கள் பாலச்சந்திரன் உயிருடன் இருப்பதையும் இரண்டு படங்கள் அவர் கொல்லப்பட்டிருப்பதையும் பதிவு செய்துள்ளது.




No comments:

Post a Comment