Saturday, March 30, 2013

யாழ்.கோப்பாய் சந்தியில் விபத்து! தாய் பலி இரு பிள்ளைகளும் உயிர் தப்பின!

யாழ்.கோப்பாய் சந்தியில் இன்று(30.03.2013) சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் முச்சக்கரவண்டியும், காரும் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதுடன், மூவர் கவலைக்கிடமான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டியை,உரும்பிராயிலிருந்து கோப்பாய் சந்தி வழியாக பிரதான வீதிக்கு திரும்ப முற்பட்ட கார் மோதியதில், முச்சக்கரவண்டி மூன்று தடவைகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதாகவும், இதில் தனது இரண்டு பிள்ளைகளுடன் முச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்த தாய் ஒருவரே சம்பவ இடத்தில் இறந்ததாகவும் விபத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

முச்சக்கரவண்டிச் சாரதி மற்றும் இரண்டு பிள்ளைகளும் பலத்த காயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment