‘எங்களோடு மிகவும் நெருக்கமான உறவினைப் பேணிய இந்தியா இன்று மாபெரும் பிரச்சினைக்கு முகம்கொடுத்துள்ளது. இந்திய ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக என்னைக் காட்டி இன்று செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். பேய்க்குப் பயந்திருந்தால் மயானத்தில் நான் வீடு கட்டியிருக்க மாட்டேன்’ என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷகுறிப்பிட்டார்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களைப் பலப்படுத்தும் நாட்டை கட்டியெழுப்பும் நீல அலை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியுடன் தொடர்புற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்பாட்டாளர்கள் 5,000 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.
‘ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களாக இருந்து, இந்நாட்டில் பல ஆண்டுகளாகவிருந்த பயங்கரவாதத்தை ஒழித்தோம். இந்நாட்டைக் கூறுபோட்டு வடக்கு கிழக்கை எங்களுக்கு இல்லாமற்செய்து, மத்திய மலைநாடும் இல்லாமற்போக முனையும் போது, எங்களால் மீண்டும் இந்நாட்டைப் பலம்மிக்க நாடாக மாற்றியமைக்க முடிந்தது. இன்று இது ஒரே நாடு. நாங்கள் இந்நாட்டை ஒன்றுபடுத்தினோம்’ என்றும் ஜனாதிபதி அங்கு குறிப்பிட்டார்.
(கேஎப்)
No comments:
Post a Comment