ஐ. பி. எல். கிரிக்கெட் போட்டியில் இலங்கை வீரர்கள் கலந்துகொள்வதை தமிழ் நாட்டு அரசியல் வாதிகள் அரசியல் ஆக்கக் கூடாது. தமிழ் நாட்டில் உள்ள இலங்கையர்கள் மீதான வன்முறை அதிகரித்தால் இலங்கையிலுள்ள தமிழ் நாட்டவர்களை நாட்டைவிட்டு வெளியேற்றுவோம் என பொதுபலசேனா அமைப்பின் பிரதான செயலாளர் கலபொடஹத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். தமிழ் நாட்டில் இலங்கை விளையாட்டு வீரர்களுக்கு எதிராகவும் இலங்கை அரசுக்கு எதிராகவும் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்ததுடன் தமிழ் நாட்டு அரசியல் வாதிகள் இன்று நேற்றல்ல காலங்காலமாக இலங்கை அரசிற்கு இடையூறாகவே இருந்து வருகின்றனர். இலங்கை ஒரு தனிநாடு என்பதை இந்திய அரசாங்கமும் தமிழ் நாட்டு அரசாங்கமும் மறந்துவிட்டது போல் திரும்பஞாபகப்படுத்த வேண்டும் என கேள்வி எழுப்பினார்.
தமிழ் நாட்டு அரசியல் வாதிகள் மேலும் மேலும் இலங்கை மக்களுக்கு இடையூறு விளைவித்தால் இலங்கையில் உள்ள தமிழ் நாட்டு மக்களை நாட்டிலிருந்து விரட்டி விடுவோம் என பொதுபலசேனா அமைப்பின் பிரதான செயலாளர் கலபொடஹத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுல்லாது தமிழ் நாட்டில் உள்ள பிரதான விமான நிலையங்களை இலங்கையர்கள் பயன்படுத்தக் கூடாது என்ற பிரசாரத்தை எமது மக்கள் மத்தியில் கொண்டு செல்வதுடன் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் நட்புறவு இல்லையெனக் கூறும் தமிழ்நாடு எமக்குத் தேவையில்லை எனக்குறிப்பிட்டார்.
மேலும் தமிழ் நாட்டு அரசியல் வாதிகளுக்கு முக்கியமான அறிவுரையொன்றை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம்.நாடுகளுக்கு இடையிலான அரசியல் பிரச்சினைகளை விளையாட்டில் புகுத்த வேண்டாம். விளையாட்டு என்பது பிரச்சினைகளை நிவர்த்தி செய்து ஒற்றுமையை கற்றுக்கொடுக்கும் பாடமாகும். அதனை சுயலாபத்துக்காக அரசியலாக்க வேண்டாமெனவும்பொதுபலசேனா அமைப்பின் பிரதான செயலாளர் கலபொடஹத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment