மன்னார் சாவற்கட்டு புனித அந்தோனியார் ஆலயத்தில் அந்தோனியார் சொரூபம் வைக்கப்பட்டிருந்த கண்ணாடிப்பேழை இனந்தெரியாதோரினால் சேதமாக்கப்பட்டுள்ளதுடன், இந்த ஆலயத்தினுள் மனித மலம் வீசப்பட்டுக் காணப்பட்டதாகவும் மன்னார் செபஸ்தியார் பேராலயத்தின் உதவிப் பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரன் தவராஜ் தெரிவித்தார். நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மழை பெய்துகொண்டிருந்த வேளையில் இந்த ஆலயத்திற்கு வந்த இனந்தெரியாத நபர்கள் சிலர், அந்தோனியார் சொரூபம் வைக்கப்பட்டிருந்த கண்ணாடிப்பேழையை சேதப்படுத்தியுள்ளதுடன், இங்கிருந்த சில பொருட்களையும் இழுத்து கீழே வீசியுள்ளனர். மேலும், இந்த ஆலயத்தினுள் மனித மலமும் வீசப்பட்டுக் காணப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இந்த ஆலயத்திற்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை வந்த மக்கள் இதனைக் கண்டு தமக்கு தெரியப்படுத்தினர்.
இதனைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் தொடர்பில் மன்னார் பொலிஸ் நிலையத்தில் தாம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் மன்னார் செபஸ்தியார் பேராலயத்தின் உதவிப் பங்குத்தந்தை அன்ரன் தவராஜ் தெரிவித்தார்.
No comments:
Post a Comment