26.05.2013 அன்று வவுனியா பொது வைத்தியசாலையில் 5 வயது உடைய சிறுமி வைத்தியசாலையில் மருத்துவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அனுமதிக்கப்பட்ட சிறுமி அன்றைய தினமே திடீரென மரணமடைந்துள்ளார். இதற்கு வைத்தியர்கள் தங்களுக்கு பரிசோதனை முடிவுகள் கிடைக்கப் பெறாமையினாலேயே சிறுமி மரணமடைந்ததாக தெரிவித்துள்ளார்கள்.ஆனால் பரிசோதனைக் குழுவோ அதற்கு தாங்கள் பொறுப்பில்லை என பதிலளித்ததுடன் பரிசோதனைக்கான மருந்து வகைகள் தங்களுக்கு வந்து சேரவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர். இவ்வாறு பரிசோதனைக்குழுவும், வைத்தியர்களும் தங்களைக் காப்பாற்றுவதிலேயே குறியாக இருந்தள்ளனர்.
இதற்கு மத்தியில் சிறுமியின் உடல் பெற்றோருக்கு கையளிக்கப்பட்டுள்ளது. பெற்றோர் இச் சம்பவங்கள் பற்றி அறியாது சிறுமியின் உடலை அடக்கம் செய்துள்ளனர்.
மரண விசாரணையிலும், பிரேதப் பரிசோதனையிலும் என்ன காரணம் குறிப்பிட்டிருப்பார்கள் என்று தெரியவில்லை. எதுவாயினும் சாதாரண மருத்துவப் பரிசோதனைக்கான மருந்துகள் கிடைக்கப் பெறவில்லை என்ற காரணத்தினால் 5 வயதுடைய சிறுமி பலியாகியுள்ளார் என வைத்தியசாலை வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. இவ்வாறு எத்தனை பேர் பலியாகப் போகின்றார்கள் என்று தெரியவில்லை.
இந்த வவுனியா பொது வைத்தியசாலைக்கு மன்னாரிலிருந்தும் வேறு பல பிரதேசங்களில் இருந்தும் மேலதிக சிகிச்சைக்காக நோயாளிகள் கொண்டு வரப்படுவது வழக்கமான விடயமாகும். அத்தகைய வைத்தியசாலையில் இத்தகைய போக்கு எத்தகையது என்பதை மக்கள் கருத்திற் கொண்டு உசார் அடைய வேண்டும்.
இந்த அசமந்தப் போக்கு நிலமைகளை அரசு களையுமா?
---சித்தன்---
No comments:
Post a Comment