பலாலி விமான நிலையம், காங்கேசன் துறைமுகம் ஆகியவற்றைச் சுற்றியுள்ள தமிழர்களின் 6,000 ஏக்கர் காணிகளை இராணுவத்துக்காகச் சுவீகரிக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளை எதிர்த்து குறைந்தது 5,000 வழக்குகளைத் தாக்கல் செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.தெல்லிப்பழையில் நேற்று(29.04.2013) திங்கட்கிழமை நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டத்தில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இந்த அறிவிப்பை விடுத்தார்.
வழக்குகளைத் தாக்கல் செய்வதற்கு ஏதுவாக, காணி ஆவணங்களைத் தருமாறு உரிமையாளர்களிடம் அவர் கோரிக்கை முன்வைத்தார். தற்போதைய நிலையில் இலங்கையில் உள்ள நீதிமன்றங்கள் அனைத்தையும் நிரம்பும் வகையிலான போராட்டமாக இந்த 5,000 வழக்குகளையும் தாம் தாக்கல் செய்யப் போவதாகவும் அவர் கூறினார்.
மே மாதம் 2ஆம் திகதி வழக்குகள் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment