Friday, April 26, 2013

விஜயகாந்தின் மகனுடன் நடிக்க ராதாவின் இளைய மகள் துளசி ஒப்பந்தம்


விஜயகாந்த் தன்னுடைய மகன் பிரபாகரனை சினிமாவில் அறிமுகப்படுத்துவதற்காக பல இயக்குநர்களிடம் கதைகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், இயக்குநர் ஹரியிடம் கதைகேட்ட விஜயகாந்த், அந்த கதை பிடித்துவிட்டதாகவும், தன் மகனை அவரது இயக்கத்தில் அறிமுகப்படுத்தப்போவதாகவும் கூறப்படுகிறது. 
 
ஹரி தற்போது சூர்யா நடிக்கும் சிங்கம்-2 படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார். இந்த படத்தின் வேலைகள் முடிந்ததும் பிரபாகரன் நடிக்கும் படத்தின் வேலைகளில் தீவிரமாக களமிறங்குவார் என கூறப்படுகிறது. 
 
இப்படத்தில் பிரபாகரனுக்கு ஜோடியாக 'கடல்' படத்தில் அறிமுகமான பழைய நடிகை ராதாவின் இளைய மகள் துளசி ஒப்பந்தமாகியுள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது. 
 
1980 களில் விஜயகாந்த் - ராதா ஜோடி பல வெற்றிகரமான படங்களை தந்துள்ளது. அந்த வரிசையில் இந்த ஜோடியும் அந்த வெற்றியை குவிக்கும் என நம்பப்படுகிறது
 

No comments:

Post a Comment