இந்திய எல்லைக்குள் ஊடுருவிய சீன ராணுவம், லடாக் பகுதியில் கூடாரம் அமைத்து தங்கியுள்ளது. முதலில் இந்த ஊடுருவலை மறுத்த சீன அரசு, பின்னர் அந்த இடம் தங்கள் பகுதி என்று தெரிவித்தது. இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சல்மான் குர்ஷித் 9-ம் திகதி சீனா செல்ல உள்ளார்.எல்லை தாண்டி வந்து 2 வாரங்கள் ஆகியும் சீனப் படைகள் வாபஸ் பெறுவற்கு எந்த அறிகுறியும் இல்லாத நிலையில், லடாக்கில் மேலும் ஒரு கூடாரம் அமைத்து தங்கள் வலிமையை அதிகரித்து வருவதாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன்மூலம் லடாக் பகுதியில் சீனப் படைகளின் கூடாரங்கள் 5 ஆக அதிகரித்துள்ளது தெரிவிக்கப்படுகின்றது.
லடாக்கில் இருந்து 70 கி.மீ. தொலைவில் உள்ள பர்ஸ்ட் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த கூடாரத்திற்கு வெளியில் 'நீங்கள் சீனப் பகுதிக்குள் இருக்கிறீர்கள்' என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பேனர் இருப்பதாகவும், அங்கு சீன ராணுவ வீரர்கள் மோப்ப நாயுடன் 24 மணி நேரமும் காவல் பணியில் ஈடுபட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment