Friday, May 24, 2013

விகாரைகள் இல்லாத இடங்களிலேயே பிரச்சினைகள் எழுகின்றன - கோத்தபாய

இலங்கையில் பௌத்த விகாரைகள் இல்லாத இடங்களிலேயே அதிக பிரச்சினைகள் இடம்பெறுவதாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பௌத்த விகாரைகளும், பிக்குகளும் இருக்கின்ற பிரதேசங்களில் எந்த விதமான பிரச்சினைகளும் எழுவதில்லை. அந்த பிரச்சினைகளுக்கு விகாரைகளில் தீர்வுகள் காணப்படுகின்றன.

ஆனால் விகாரைகள் எந்ததெந்த இடங்களில் இல்லையோ அந்தந்த இடங்களிலேயே அதிக பிரச்சினைகள் காணப்படுகின்றன.

எனவே எதிர்வரும் காலத்தில் நாட்டின் எல்லா பிரதேசங்களிலும் விகாரைகளை நிர்மாணித்து, பௌத்த பிக்குகளை அங்கு தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment