Friday, May 24, 2013

சூதாட்டத்தில் சென்னை அணி வீரர்களுக்கு தொடர்பா?



ஐபிஎல் சூதாட்டத்தில் சென்னை அணியை சேர்ந்த மூன்று வீரர்களுக்கும்  ொடர்பிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என மும்பை பொலிசார் அறிவித்துள்ளனர்.

ஐபிஎல் போட்டியில் மூத்த கிரிக்கெட் வீரர் ஒருவர் உட்பட 3 சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த வீரர்கள் விண்டூ தாரா சிங்குடன் தொடர்பு வைத்திருந்தது தெரிய வந்துள்ளது.

விண்டூ கூறிய அந்த வீரர்களின் பெயர்களை தற்சமயம் காவல்துறை வெளியிடவில்லை.

அவர்களைப் பற்றிய விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்த பிறகு அவர்கள் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் என மும்பை பொலிசார் அறிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment