அப்பகமுவ பிரதேச செயலக பிரவிற்குட்பட்ட பகுதியில் 70 வீதத்திற்கு மேற்பட்ட பகுதிகளில் பெருந்தோட்ட துறையினர் வாழ்கின்றனர். இங்கு எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் அனைத்தும் தோட்டப்புறங்களுக்கும் பாரபட்சமின்றி சென்றடைவதில் அரச அதிகாரிகள் விசேட கவனம் செலுத்த வேண்டும் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பெ.இராஜதுரை தெரிவித்தார்.
அம்பகமுவ பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற அம்பகமுவ பிரதேசத்தின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டத்திற்கு தலைமைதாங்கி உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,
கிராம சேவை அதிகாரிகள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், அண்மையில் அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரி உதவி அபிவிருத்தி அதிகாரிகள் அனைவரும் பொது மக்களுடன் நேரடி தொடர்புகளைக்கொண்டிருப்பதால் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் சகல அபிவிருத்தி வேலைத்திட்டங்களும் முறையாகவும் நேர்த்தியாகவும் மக்களைச் சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டும்.
மேலும் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் அனைத்தும் தோட்டப்புறங்களுக்கும் பாரபட்சமின்றி சென்றடைவதில் அரச அதிகாரிகள் விசேட கவனம் செலுத்த வேண்டும் என கூறினார்.
மேலும் இக்கூட்டத்தில் அம்பகமுவ பிரதேச செயலகம் அம்பகமுவ பிரதேசசபை, அட்டன் டிக்கோயா நகரசபை போன்ற உள்ளூராட்சி நிறுவனங்களி்ன் மூலம் நடைமுறப்படுத்தப்படும் அபிவிருத்தி திட்டங்களின் அறிக்கைகளும் முன்வைத்து கலந்துரையாடப்பட்டது.

No comments:
Post a Comment