புத்த பகவானின் வழிகாட்டல்கள் இலங்கையை புனித பூமியாக மாற்றியதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
புத்த தர்மத்தினால் கிடைத்த பணிவினால் சிறந்த கலாசாரப் பண்புகளுடன் கூடிய உலகில் திகழும் வாய்ப்பு இலங்கைக்கு கிடைத்துள்ளதாக வெசாக் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தர்ம போதனைகளை பின்பற்றியதால் இரண்டாயிரத்து 500 வருடங்களுக்கு மேலாக பெளத்தர்கள் மிகப் பெரும் பாதுகாப்பை பெற்றுள்ளதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனால் தேசிய ஐக்கியமும் சமய நல்லிணக்கமும் வலுப்பெற்றுள்ளதாக ஜனாதிபதி தமது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை குரோத மானப்பான்மையை விடுத்து வாழ்க்கையின் யாதார்த்தத்தை உணர்ந்து செயற்படுவதற்கு அனைவரும் உறுதிகொள்ள வேண்டும் என பிரதமர் டி.எம்.ஜயரத்ன விடுத்துள்ள வெசாக் தின வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகிலுள்ள எதுவும் நிலையானது அல்லவென்ற உண்மையை புரிந்துகொண்டு நல்லிணக்கத்துடனும் சமத்துவத்துடனும் வாழ்வதே சிறந்தது என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment