Friday, June 28, 2013

வலம்புரி பத்திரிகைக்கு எதிராக யாழ் முஸ்லிம்கள் போராட்டம். பத்திரிகைகளை எரித்தனர். (படங்கள் இணைப்பு)

யாழ் குடாநாட்டு பத்திரிகை ஒன்றிற்கெதிராகவும் முஸ்லீம்கள் மீது அபாண்டமாக விமர்சிக்கும் ஊடகத்திற்கு எதிராகவும் யாழ் முஸ்லீம்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று (28.6.2013)மதியம் ஜீம்மா தொழுகையின் பின்னர் ஒன்று கூடிய முஸ்லீம்கள் ஊர்வலமாக இப்பத்திரிகைக்கெதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பியதுடன் நான்கு சந்தியில் வைத்து குறித்த பத்திரிகை பிரதிகளை எரித்தனர்.

நூற்றுக்கணக்கான முஸ்லீம்கள் இவ்வார்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு வலம்புரியே முஸ்லீம்கள் மீது பழி சுமத்தும் செய்தியை வெளியிடாதே,வலம்புரியே முஸ்லீம் தமிழ் உறவை சீர் குலைக்காதே,முஸ்லீம்கள் மீது வீண் பழி சுமத்தும் ஊடகங்களை ஒழிப்போம்,பொதுபல சேனாவின் ஊதுகுழலா வலம்புரி ஊடகம்,கிழக்கு முஸ்லீம் தீவிரவாத அமைப்பு வடக்கு விஜயமா ஆதாரம் உண்டா வலம்புரியே என பல்வேறு வாசகங்கள் தாங்கிய அட்டைகளை ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டோர் வைத்திருந்தனர்.

இறுதியாக அமைதியான முறையில் கலைந்து சென்றனர்.

( பாறூக் சிகான்)

No comments:

Post a Comment