Tuesday, July 23, 2013

64 வயது பாட்டியை வன்புணர்வுக்குட்படுத்திய 70 வயது பாட்டனைத் தேடி வலை விரிப்பு

64 வயதுடைய பெண்ணொருவரை வன்புணர்வுக்குட்படுத்திய 70 வயது நபரை கைது செய்வதற்கு புலத்சிங்கள பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

வன்புணர்வுக்குட்படுத்தப்பட்ட பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்தப் பெண்ணும் வன்புணர்வுக்குட்படுத்தியவரும் நெருங்கிய சொந்தக்காரர்கள் என பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. சந்தேக நபர் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டுக்கு அருகாமையிலேயே வசித்து வந்தவராவார்.

வீட்டில் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இந்த வன்புணர்வு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

(கேஎப்)

No comments:

Post a Comment