அனுராதபுரத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இலங்கை மின்சாரசபைக்கு சொந்தமான வாகனம் A9 வீதி பழையமுறுகண்டி பிள்ளையார் கோயிலை இன்று அதிகாலை இடித்து தள்ளியதில் கோயில் முற்றாகச் சேதமடைந்துள்ளது.
இந்த விபத்தில் பழையமுறுகண்டி பிள்ளையார் கோயில் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் காயமடைந்தவர் கிளிநொச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 
இச்சம்பவத்தை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.    

No comments:
Post a Comment