
நாளுக்கு நாள் முளைவிடும் அடிப்படைவாதத்தைக் கிள்ளியெறியாமல் இருப்பதனால் இனங்களிடையே பிளவுகள் உருவாகிவருகின்றன என மேல் மாகாண சபை ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் குறிப்பிட்டார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த மாகாணசபை உறுப்பினர், நாட்டில் அடிப்படைவாதத்தைக் கட்டியெழுப்புவதற்காகப் பாடுபடுகின்றவர்களைத் தேடிப்பிடித்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதனால் சட்டவாக்கம் கீழே சாய்ந்து நாடு மோசமான நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது எனவும் குறிப்பிட்டார்.
மேலும், நாட்டில் மேலெழுந்துள்ள இவ்வாறான நிலைமையினால் நாட்டு மக்களின் மதவழிபாட்டு உரிமை இல்லாதொழிந்திருப்பதாகவும், மத சுதந்திரம் இல்லாதொழிந்து நாட்டு மக்கள் கவலைமிக்கவர்களாக போர்த்துக்கேயரின் காலத்திலேதான் இருந்ததாகவும், அதன் பின்னர் அதிகமாக மத உரிமை இல்லாதொழிந்திருப்பது தற்போதைய அரசாங்கத்திலேயே என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
(கேஎப்)
No comments:
Post a Comment