வடக்கு மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தலில் வெற்றிபெற்ற கட்சிகள் பெற்றுக்கொண்ட போனஸ் ஆசனங்களுக்கான உறுப்பினர்களை பெயரிடு மாறு அந்தக் கட்சிகளுக்கு அறிவித்துள்ளதுவெற்றிபெற்ற கட்சிகளுக்கு இரண்டு போனஸ் ஆசனங் கள் வீதம் மூன்று மாகாணங்களிலும் ஆசனங்கள் கிடை க்குமென பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம் மொஹமட் தெரிவித்துள்ளார் இதற்காக தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த இரண்டு உறுப்பினர்களை பெயரிட முடியுமென தேர்தல்கள் செயலகம் சுட்டிக்காட்டி யுள்ளது.
ஆயினும் போனஸ் ஆசனங்களுக்காக நியமிக்கப்படும் உறுப்பினர்களை கட்சியே தீர்மானிக்க வேண்டுமென பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
வடமாகாண சபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமக்குரிய இரண்டு போனஸ் ஆசனங்களில் ஒன்றை நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சார்பில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்ட அஷ்ஷெய்க் ஐயூப் அஸ்மின் அவர்களுக்கு வழங்குவதற்கு ஏகமனதாக தீர்மானித்துள்ளதாகவும் மற்றய ஆசனத்தை த.தே.கூட்டமைப்பின் பெண்ணொருவருக்கு வழங்கப்படலா மெனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
No comments:
Post a Comment