Monday, January 14, 2013

சம உரிமைப் பொராட்ட இயக்கத்தினரின் வாகனம் மீது கற்கள் வீசித் தாக்குதல்

யாப்பாணம் சென்ற சமஉரிமைப் போராட்ட இயகக்கதினர் மீது இன்று இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ் பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்யுமாறு வலியறுத்தும் கை எழுத்து வேட்டைக்காக சம உரிமைப் போராட்ட இயக்கத்தின் முக்கியஸ்தர்கள் யாழ்ப்பாணத்திற்குச் சென்ற வாகனத்தின் மீதே இன்று காலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
யாழ் கோட்டைப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வானின் மீது இன்று காலை 8.45 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இரு மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்களே கற்களை வானின் மீது வீசி தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இதனால் வேனின் முன்பக்கக் கண்ணாடிகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.







No comments:

Post a Comment