நேற்று இரவு மொரட்டுவை பல்கலைக்கழக மாணவக் குழுக்கள் இடையே நடைபெற்ற மோதல் சம்பவத்தால் ஆண்கள் மற்றும் பெண்கள் விடுதிகளுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதோடு மூன்று மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த அமைதியின்மையின் பின்னர்
பல்கலைக்கழக விஞ்ஞான பீடம் மீண்டும் அறிவிக்கும் வரை மூடப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக பல்கலைக்கழக மாணவர்கள் கடுமையாகத் தாக்கப்படுகின்றனர்.
கடந்த வருடம் மூன்று மாதங்களுக்கு மேல் நடத்தப்பட்ட விரிவுரையாளர்களின் ஆர்ப்பாட்டம், தற்போதைய இவ்வாறான தாக்குதல் சம்பவங்களால் மாணவர்களின் கல்வி நிலை மிக மோசமான நிலைக்குத் தள்ளப்படுகின்றது.
-ஷான்-













No comments:
Post a Comment