தஞ்சை பெரிய கோவிலுக்கு இன்று சென்ற இலங்கை பௌத்த பிக்குகளை கோவில் வளாகத்தில் வைத்து பிரதேச மக்கள் தாக்கியுள்ளனர். திடீரென தஞ்சை பெரிய கோவில் வளாகத்துக்குள் சென்ற இவர்களை பிரதேச மக்கள் சூழ்ந்துகொண்டு தாக்கினர், தப்பித்து ஓடிய பிக்குகள் அருகில் இருந்த அரச அலுவலகம் ஒன்றில் தஞ்சம் புகுந்ததைத் தொடர்ந்து, அவர்கள் பொலிசாரின் பாதுகாப்புடன் விமான நிலையம் நோக்கி அழைத்துச் செல்லப்பட்டனர்.எனினும் விமான நிலையம் அழைத்துச் செல்லும் வீதி வழியே அவர்களை வழி மறித்த பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சி உறுப்பினர்கள் தாக்குதல் மேற்கொண்டதில், அவர்களை அழைத்துச் சென்ற வாகனங்கள் சேதத்திற்கு உள்ளாகியுள்ளன.
இவ்வாறு தாக்குதல் மேற்கொண்ட பா.ம.க உறுப்பினர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சி உறுப்பினர்கள் 15 க்கும் அதிகமானோர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான குறித்த பிக்குகள் இலங்கையிலிருந்து சுற்றுலா பயணமாக தாய்லாந்து சென்று அங்கிருந்து தமிழகம் நோக்கி சென்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment