Thursday, April 25, 2013

கொழும்பு ஸ்ரீ கதிரேசன் வீதி ஸ்ரீ தேவி கருமாரியம்மன் தேர்

25-04-2013 இன்று காலை 9.00 மணியளவில் கொமும்பு ஸ்ரீ கதிரேசன் வீதி ஸ்ரீ தேவி கருமாரியம்மன் தேர் உற்சவம் நடைபெற்றது.

இலங்கையின் தலைநகரமாகிய கொழும்பில் வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ கதிரேசன் வீதியில் பக்தர்களின் குறை நிறைகளைத்தீர்த்து நல்லாசியுடன் பக்தர்களின் உள்ளங்களில் இடம்பிடித்து அம்பிகை எழுந்தருளி வீற்றிருக்கின்றாள்.


 இவ்உற்சவத்தின் போது பெரும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மனமுருகி கற்பூரசட்டி இமாவிளக்கு இபொங்கல் இகாவடிகள் போன்றன எடுத்து தமது நேர்த்தி கடன்களை பூர்த்தி செய்து கொண்டனர்.

இவ்ராதோற்சவம் புதிய கதிரேசன் வீதியூடாகக் கன்னாரத்தெருவை அடைந்து செட்டியார் வீதியூடாக இருப்பிடத்தை வந்து அடைந்தது. இவ்வுற்சவத்தின் போது ஆலயவளாகம் மற்றும் வீதி போன்றவற்றில் ஆயிரக்கனக்கான பக்தர்கள் நிறைந்து காணப்பட்டார்கள்.






ஷாமிலன்


No comments:

Post a Comment