‘ஜனாதிபதி என்னை மாகாணசபை தேர்தலில் போட்டியிட வேண்டாம் என கூறினார். அவர், அமைச்சரவையிலுள்ள ஒரு தமிழ் அமைச்சரை இழக்க விரும்பவில்லை. ஆனாலும், நான் போட்டியிட வேண்டும் என நினைக்கிறேன்’ என்று ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரான, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
‘ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வெற்றிலை சின்னத்தில் போட்டியிடாமல் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வீணை சின்னத்தில் போட்டியிட்டால் கூடுதல் வாக்குகளை பெற முடியும் என்ற கருத்து பரவலாக உள்ளது’ என்றும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் டெய்லிமிரருக்கு அளித்த செவ்வியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
‘வடமாகாண சபையை அமைக்கும்போது மாகாணசபைக்கு வழங்கப்பட்டுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை சிறிது காலம் நிறுத்தி வைக்க வேண்டும்.
இந்த அதிகாரங்களை கையளிப்பது தொடர்பாக தெற்கில் கடுமையான கருத்துக்கள் வெயிடப்பட்டு வருவதால் தமிழ், சிங்கள மக்களிடையே புரிந்துணர்வு ஏற்படும்வரையில் இதனை நிறுத்தி வைக்கவேண்டும்.
வன்முறை, அபிவிருத்தியின்மை, அரசியல் உரிமை மறுப்பு என்பன தமிழ் சமுகத்தை நீண்டகாலமாக வாட்டியெடுத்த பிரச்சினைகளாகும்.
இப்போது, பயங்கரவாதம் பூரணமாக ஒழிக்கப்பட்டுள்ளது. வடக்கில் துரித வேகத்தில் அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தற்போது அரசியல் பிரச்சினை மட்டுமே உள்ளது.
நான் சூரியனையோ, சந்திரனையோ கேட்வில்லை. ஒரு தொடக்கமாக, தறபோதைய அரசியலமைப்பை செயற்படுத்துமாறுதான் கேட்கிறேன்’ என்றார்.
No comments:
Post a Comment